பிக் பாஸ் எலிமினேஷன்! - வெளியேறப் போகும் 4 வது போட்டியாளர் இவர் தான்

பிக் பாஸ் சீசன் 3 யில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெளியேற இருப்பது யார்? என்பதை தெரிந்துக் கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்த நிலையில், இன்றைய எலிமினேஷன் ரவுண்ட் மூலம் வெளியேறப் போவது மீரா மிதுன் தான், என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக மீரா மிதுன் நடவடிக்கையால் அதிருப்தியடைந்திருக்கும் ரசிகர்களும், அவர் தான் வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நேற்று நிகழ்ச்சிக்கு வந்த கமல், மீரா மிதுனை கேள்விகளாக கேட்டு சிக்க வைத்ததோடு சேரன் விஷயத்தில் அவர் செய்த தவறையும் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருப்பதற்கு மீரா மிதுன் முக்கிய காரணமாக இருப்பதால், அவரை தொடர்ந்து வீட்டில் தங்க வைக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர் விரும்பினாலும், ரசிகர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதால் அவரை போட்டியில் இருந்து எலிமினேட் செய்யும் முடிவுக்கு சேனல் நிர்வாகும் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.