மக்களை ஏமாற்றும் பிக் பாஸ் கவின்! - பிரபலத்தின் பகீர் குற்றச்சாட்டு

பிக் பாஸ் சீசன் 3-யின் முக்கிய போட்டியாளராக இருக்கும் கவின், ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர். தற்போது பிக் பாஸ் மூலம் இன்னும் பிரபலமாகியிருக்கும் கவின், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததுமே தான் ஐந்து பெண்களை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், சக பிக் பாஸ் போட்டியாளர்களான சாக்ஷி, லொஸ்லியா ஆகியோரை காதலிப்பதாக கூறிய கவின், தொடர்ந்து தனது காதல் லீலைகளை அரங்கேற்றி வந்த நிலையில், அந்த இரண்டு பெண்களும் அவரது காதலை ஏற்கவில்லை.
இந்த நிலையில், கவினுக்கு ஏற்கனவே காதலி இருப்பதாகவும், அவரை பிக் பாஸில் பார்த்து தமிழக மக்கள் ஏமாந்து வருவதாகவும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கவின் ஹீரோவாக நடித்த ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தை தயாரித்த லிப்ரா சந்திரசேகர், தான் கவின் பற்றி புகார் குற்றச்சாட்டு அளித்தவர்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், “கவினுக்கு காதலி இருக்கிறார். காதலியுடன் அவர் பேசுவதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் நடிப்பு திறமையை பார்த்து அவரை வைத்து படம் இயக்கவேண்டும் என முடிவெடுத்து நான் ஏமாந்தது போல, தற்போது தமிழ்நாடு மக்களும் கவினை பிக்பாஸில் பார்த்து ஏமாந்து கொண்டிருகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், அந்த காதலி யார்? என்பதை தெரிவிக்க மறுத்த ரவீந்தர் சந்திரசேகர், அதை கவினே விரைவில் அறிவிப்பார் என்று ட்விஸ்ட் வைத்துவிட்டார்.