Sep 27, 2019 06:15 AM

வெற்றி பெற வேண்டிய சேரனை வெளியேற்றிய பிக் பாஸ்! - பின்னணியில் நடந்த சதி

வெற்றி பெற வேண்டிய சேரனை வெளியேற்றிய பிக் பாஸ்! - பின்னணியில் நடந்த சதி

பிக் பாஸ் சீசன் 3 இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், முக்கிய போட்டியாளரான கவின் ரூ.5 லட்சத்திற்காக வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதே போல், போட்டியாளர்களில் முக்கியமானவராக திகழ்ந்த சேரன் வெளியேற்றப்பட்டதற்கு பின்னணியிலும், நிகழ்ச்சி குழுவினர் சதி திட்டம் இருப்பது அம்பலமாகியுள்ளது.

 

ஒரு முறை பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன், சீக்ரெட் ரூம் மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கள் எண்ட்ரியானார். அதில் இருந்து ரசிகர்களின் வாக்குகளை அதிகமாக பெற்று முதலிடத்தில் நீடித்தவர், திடீரென்று வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

 

இந்த நிலையில், சேரன் தான் போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டியவர் என்றும், அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் திட்டம் போட்டு வெளியேற்றியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுவதோடு, இது குறித்து நிகழ்ச்சியாளர்களில் ஒருவர் சேரனிடமே கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

 

அதாவது, சேரன் இறுதி வரை இருந்தால் அவர் தான் டைடிலை கைப்பற்றுவார் என்பதை கணித்த நிகழ்ச்சியாளர்கள், சேரன் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அவரை வெளியேற்றிவிட்டார்களாம். காரணம், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் வெற்றி பெறுவது போல காண்பித்தால் தான், அடுத்தடுத்த சீசன்கள் இளைஞர்களிடம் ரீச் ஆகும் என்பதால், நிகழ்ச்சியாளர்களை சேரனை வெளியேற்றிவிட்டார்களாம்.

 

இது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்களில் ஒருவர், சேரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “சார், நீங்க தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஆனால், இளைஞர்களுக்காக உங்களை வெளியேற்றிவிட்டோம்.” என்று கூறினாராம். இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட சேரன், இளைஞர்களுக்கு வழிவிடுவது நல்ல விஷயம் தானே, என்று கூறியதோடு, இளைஞர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தாராம்.