Aug 29, 2019 05:25 AM

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘பிகில்’ தயாரிப்பாளர்! - ஏன் தெரியுமா?

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘பிகில்’ தயாரிப்பாளர்! - ஏன் தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் போஸ்டர் மற்றும் பஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதன் பிறகு படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட் ஏதும் வெளிவரவில்லை. இதற்கிடையே படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னணி வேலைகளில் இரவு பகல் பாராமல் பிகில் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்களாம்.

 

இம்மாதம் இறுதியில் “சிங்கம்பெண்ணே” பாடலை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், அப்பாடலுக்கான சில மாண்டேஜ் ஷாட்கள் படமாக்கப்பட வேண்டி உள்ளதால், இம்மாதம் இறுதியில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், செப்டம்பர் மாதம் தான் “சிங்கபெண்ணே’ பாடல் வெளியாகும் என்பதால் விஜய் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள்.

 

மேலும், தீபாவளியன்று விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாவதால், ‘பிகில்’ படத்திற்கு திரையரங்க பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ‘பிகில்’ படத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய் ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், விரைவில் “சிங்கம்பெண்ணே” பற்றிய அப்டேட்டை வெளியிட்டு உங்களை மகிழ்விப்பேன், காத்திருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

 

Bigil Poster

 

ஆனால், அவர் வெளியிட்ட போஸ்டரில் முக்கியமான நடிகர்கள் இடம்பெறவில்லை. ஸ்டண்ட் கலைஞர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள். மேலும், வேறு ஒரு நிறுவனத்திடம் படத்தின் விநியோக உரிமையை கொடுத்திருக்கும் ஏஜிஎஸ், அந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் ‘பிகில்’ படத்தை வெளியிடும் என்றும், அது சாதனை ரிலீஸாக இருக்கும், என்றும் தெரிவித்துள்ளது.