Oct 17, 2019 06:22 PM

‘பிகில்’ 25 ஆம் தேதி ரிலீஸ்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘பிகில்’ 25 ஆம் தேதி ரிலீஸ்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜயின் ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படப்பிடிப்பு தொடங்கும் போதே அறிவிக்கப்பட்டாலும், நடுவே எழுந்த சில பிரச்சினைகளினால் படம் வெளியாகுமா? என்ற பெரிய கேள்வி எழுந்தது. ஆனால், தயாரிப்பு தரப்பு படத்தை தீபாவளிக்கு கொண்டு வருவதில் மும்முரம் காட்டியது.

 

இதற்கிடையே தீபாவளி அக்டோபர் 27 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தை முன் கூட்டியே அக்டோபர் 25 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது என்றும், இதில் நடிகர் விஜய்க்கு உடன்பாடு இல்லாததால், ரிலீஸ் தேதியில் குழப்பம் நீடிப்பதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், அனைத்து குழப்பங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று ஏஜிஎஸ் நிறுவனம் ‘பிகில்’ ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் ரிலீஸ் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.