Oct 05, 2019 02:53 PM

’பிகில்’ டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!

’பிகில்’ டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!

விஜயின் ‘பிகில்’ தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார். இதற்கிடையே, தற்போது டீசரின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நடைபெற்று வருவதால் டீசர் வெளியீட்டில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அதே சமயம், இன்னும் இரண்டு நாட்களில் டீசர் வெளியாகிவிடும் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளதால், அநேகமாக ஆயுத பூஜையை முன்னிட்டி வரும் 7 ஆம் தேதி டீசர் வெளியாக வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

 

அதேபோல், டீசர் வெளியான சில நாட்களில் டிரைலரையும் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு அந்த டிரைலரில் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க உள்ளதாம்.