Jun 18, 2019 10:53 AM

பிகினி உடை, முத்தக் காட்சி! - ரூட்டு மாறும் பிரியா பவானி ஷங்கர்

பிகினி உடை, முத்தக் காட்சி! - ரூட்டு மாறும் பிரியா பவானி ஷங்கர்

தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றிப் பெற்ற நடிகைகளில் பிரியா பவானி ஷங்கர் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயினான இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்கள் தான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மான்ஸ்டர்’ படம் கூற மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.

 

தற்போது கூறுதி ஆட்டம், வான், கசடற தபற மற்றும் ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் படம் என ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர், ஹோம்லியாக நடிப்பதில் இருந்து விலகி கவர்ச்சியாகவும் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

 

இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில், அவரிடம் ”முத்தக்காட்சி, பிகினி உடை, இதில் ஏதாவது ஒன்றில் நடிக்க வேண்டும், என்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

 

அதற்கு பதில் அளித்த பிரியா பவானி ஷங்கர், “கதைக்கு தேவை என்றால் முத்தக்காட்சி கூட ஓகே தான், ஆனால், பிகினி சான்ஸே இல்லை” என்று பதில் அளித்திருக்கிறார்.

 

தற்போது முத்தக்காட்சிக்கு ஓகே சொல்லியிருக்கும் பிரியா பவானி ஷங்கர், இன்னும் கொஞ்சம் நாளில், கதைக்கு தேவை என்றால் பிகினி உடையும் ஓகே தான், என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.