May 23, 2019 10:34 AM

மத்தியில் மீண்டும் பா.ஜ.க! - குட் பாய் சொல்ல ரெடியாகும் நடிகர் சித்தார்த்

மத்தியில் மீண்டும் பா.ஜ.க! - குட் பாய் சொல்ல ரெடியாகும் நடிகர் சித்தார்த்

நாடு முழுவதும் ஆளும் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்வலைகள் இருந்த நிலையில், இந்தியாவின் முகத்தை மாற்றுவதற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ஜ.க கட்சியே அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.

 

இதற்கிடையே, பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சனம் செய்த நடிகர்களில் ஒருவரான சித்தார்த், பாஜக ஆட்சிக்கு வந்தால், நான் என் டுவிட்டர் தளத்தை நீக்கிவிடுவேன், என்று கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு சாதகமாக இருப்பதோடு, சுமார் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், தான் சொன்னதை போல ட்விட்டர் பக்கத்திற்கு குட் பாய் சொல்ல நடிகர் சித்தார்த் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.