Jul 10, 2018 10:42 AM

சிம்புவுக்கு நோ, பெரிய ஹீரோக்களுக்கு ஓகே - கரார் காட்டும் நடிகையின் அப்பா

சிம்புவுக்கு நோ, பெரிய ஹீரோக்களுக்கு ஓகே - கரார் காட்டும் நடிகையின் அப்பா

‘செக்க சிவந்த வானம்’ படத்தை முடித்த கையோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ரெடியாகியுள்ள சிம்புவின் புதிய படத்திற்கு ‘மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் படமாக உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 

முதலில் கீர்த்தி சுரேஷை ஜோடியாக்க நினைத்த படக்குழு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை ஹீரோயினாக்க முடிவு செய்து அதற்கான போனி கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். சம்பளமும் பெரிய அளவில் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்களாம்.

 

ஆனால், ஜான்வியின் தந்தை போனி கபூர் நோ சொன்னதோடு, தற்போது தனது மகள் பாலிவுட் படங்களில் மட்டுமே நடிப்பார், அப்படியே பிற மொழிகளில் நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பார், என்று கராராக கூறிவிட்டாராம்.

 

Janvi

 

இதனால், சிம்புவுக்கு கோலிவுட் ஹீரோயின் ஒருவரை தான் ‘மாநாடு’ ஜோடியாக்க போகிறது என்று கூறப்படுகிறது.