Oct 25, 2018 07:24 AM

சந்தானத்திற்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

சந்தானத்திற்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

’சர்வர் சுந்தரம்’, ‘தில்லுக்கு துட்டு 2’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், அறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார்.

 

சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி என்ற பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் இந்தியில் வெளியான ‘மாஸ்ட்ரம்’, ‘த பர்ஃபெக்ட் கேர்ள்’, ‘லவ் கேம்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் யதீன் கார்கேயர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்ய, ராஜா கலையை நிர்மாணிக்கிரார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜான்சன் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குநர் சீசன் 4-ல் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பூஜையுடன் நடைபெற்றது. விரைவில் படத்தில் தலைப்பும், பஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.