Apr 25, 2019 07:20 AM

பா.இரஞ்சித்துக்கு விருந்து வைத்து கெளரவித்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

பா.இரஞ்சித்துக்கு விருந்து வைத்து கெளரவித்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

பாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், தமிழ் சினிமாத் துறை மற்றும் இயக்குநர்கள் மீது பெரிய மதிப்பு வைத்திருக்கிறார். இந்திய சினிமாவில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, இந்திய அளவில் வெளியாகும் நல தரமான படங்களுக்கும், படைப்பாளிகளையும் பாராட்டியும் வருகிறார்.

 

இந்த நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருப்பதோடு, அவருக்கு விருந்து வைத்து கெளரவித்தும் இருக்கிறார்.

 

‘காலா’ மற்றும் ‘பரியேறும் பெருமாள்’ படங்களை சமீபத்தில் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், பா.இரஞ்சித்தை வர சொல்லி பாராட்டியதோடு, காலா மற்றும் பரியேறும் பெருமாள் படங்கள் குறித்து சிலாகித்து பேசியவர், அப்படங்களில் இருக்கும் அரசியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

 

மேலும், ”இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று தனது விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார்.

 

இது குறித்து கூறிய இயக்குநர் பா.இரஞ்சித், “உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.  காலா, பரியேறும் பெருமாள் குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம், என்றார்.