Oct 29, 2019 01:44 PM
விஜய் வீட்டில் வெடிகுண்டு! - மிரட்டல் விடுத்தவர் கைது

நடிகர் விஜயின் ‘பிகில்’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. சில பிரச்சினைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறததோடு, எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர், சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அங்கு வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர், சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.