ஆகஸ்ட் மாதம் வெளியாகும் ‘பூமராங்’ பாடல்கள்!

’இவன் தந்திரன்’ வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கண்ணன் இயக்கும் படம் ‘பூமராங்’. அதரவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார்.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் வெற்றியால் புகழின் உச்சிக்கு சென்றிருக்கும் ரதன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பதால் இப்படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது.
இது குறித்து இயக்குநர் கண்ணன் கூறுகையில், “மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த ‘பூமராங்’ குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.