Aug 03, 2019 05:33 AM

தமிழ் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் சர்ச்சை நடிகை! - லீக்கான ஆதாரம் இதோ

தமிழ் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் சர்ச்சை நடிகை! - லீக்கான ஆதாரம் இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதோடு, காதல் விவகாரத்தால் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இதற்கிடையே, நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், ஐந்தாவதாக வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

 

அதே சமயம், வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கும் புது போட்டியாளர் யார்? என்பதை தெரிந்துக் கொள்வதிலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

வனிதா, மீரா மிதுன் என்று நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்துபவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியெறிவிட்டதால், புதிய போட்டியாளர் பவர் புல்லாகவும், மக்களிடம் அதிகம் பிரபலமானவராகவும் இருக்க வேண்டும், என்று முடிவு செய்த சேனல் நிர்வாகம் பலரை தேர்வு செய்து வைத்திருந்தது. அதில் முக்கியமானவர் நடிகை கஸ்தூரி.

 

சர்ச்சைகளுக்கு பேர்போன கஸ்தூரியை பிக் பாஸ் வீட்டுக்குள் இறக்குவதற்காக சேனல் நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கஸ்தூரி மட்டும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

 

Kasthuri

 

இந்த நிலையில், பிக் பாஸ் கஸ்தூரி பங்கேற்கப் போவது உறுதியாகியுள்ளது. அதற்கான ஆதாரமும் லீக்கானது தான் தற்போதைய ஹைலைட்.

 

நாளை வைல்ட் கார்டு மூலம் பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கஸ்தூரி பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகிறார். இது குறித்து அவர் விஜய் டிவி குழுவினருடன் செய்த போன் சாட் ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது.

 

இந்த ஸ்கிரீன் ஷாட்டை நடிகை கஸ்தூரி தவறுதலாக ட்வீட் செய்து பிறகு நீக்கியுள்ளார்.

 

இதோ அந்த ஆதாரம்,

 

Kasthuri Big Boss proof