Jul 21, 2018 05:16 AM
திருமணம் குறித்து அறிவித்த கேத்ரின் தெரசா!

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான கேத்ரின் தெர்சா, தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வந்தாலும், தெலுங்கு சினிமாவுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
தற்போது ஐதராபாத்தில் செட்டில் ஆவதற்காக அங்கே பல கோடியில் பங்களா ஒன்றை வாங்கியுள்ளவர், திருமணம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, இதுவரை தான் யாரையும் காதலிக்க வில்லை. ஆனால், என்னை காதலிப்பதாக கூறி நிறைய பேர் அணுகியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிவிட்டேன், என்று கூறுபவர் 5 வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறாராம்.