ஆர்யா - சாயீஷா திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட பிரபலங்கள்! - புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஆர்யா நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தாலும், காதலில் அவர் ஜெயித்து விட்டார். தமிழ் சினிமாவின் பிளேய் பாய் என்று அழைக்கப்படும் ஆர்யா, எப்போதும் ஜாலியாக இருப்பதோடு, அனைவரையும் உற்சாகப்படுத்தும் எதார்த்தமான மனிதராகவே வலம் வருகிறார்.
ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் இன்று ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வருகிறது. சில முக்கிய சினிமா பிரபலங்களை மட்டுமே தனது திருமணத்திற்கு அழைத்திருக்கும் ஆர்யா, மொத்தமாக 100 அழைப்பிதழ்களை மட்டுமே விநியோகம் செய்திருப்பதாகவும், அதில் 10 முதல் 15 அழைப்பிதல்கள் மட்டுமே சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆர்யா - சாயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள்.
இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதோ புகைப்படங்கள்