Feb 22, 2020 11:17 AM

வாடகை தாய் மூலம் 2 வது குழந்தை பெற்ற பிரபல நடிகை!

வாடகை தாய் மூலம் 2 வது குழந்தை பெற்ற பிரபல நடிகை!

சினிமா நடிகைகள் பலர் தாமதமாக திருமணம் செய்துக்கொள்வதோடு, குழந்தை பிறப்பிலும் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இது புதிதல்ல என்றாலும், தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை சில நடிகைகள் பின்பற்ற தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்த ஷில்பா ஷெட்டி, ‘மிஸ்டர்.ரோமியோ’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு விஜயின் ‘குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகு அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதே சமயம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்த ஷில்பா ஷெட்டி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

 

இதற்கிடையே, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி, 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தைக்கு தாயானார்.

 

தற்போது 44 வயதாகும் ஷில்பா ஷெட்டிக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு சமிஷா என அவர் பெயரிட்டுள்ளார்.

 

Shilpa Shetty

 

இந்த நிலையில், ஷில்பா ஷெட்டிக்கு தற்போது பிறந்திருக்கும் குழந்தை வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை என்று தகவல் வெளியானதோடு, பாலிவுட் மீடியாக்களில் இது தொடர்பான செய்திகள் தீயாக பரவி வருகிறது. ஆனால், இதுவரை இது குறித்து ஷில்பா ஷெட்டி தரப்பு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.