Sep 18, 2019 05:50 AM

லொஸ்லியாவிடம் இருந்து ஷெரின் பக்கம் தாவிய சேரப்பா!

லொஸ்லியாவிடம் இருந்து ஷெரின் பக்கம் தாவிய சேரப்பா!

லொஸ்லியாவை அன்பு மகளாக பாவிக்கும் சேரனை, பிக் பாஸ் வீட்டில் அனைவரும் அன்போடு சேரப்பா என்று அழைக்கிறார்கள். இவர் லொஸ்லியாவிடம் காட்டும் நெருக்கத்தை சிலர் தவறாக பேசினாலும், தான் அவளை மகளாக மட்டுமே பார்க்கிறேன், என்பதை வார்த்தையால் சொல்லாமல் செயலில் சேரன் காட்டி வருகிறார்.

 

இதற்கிடையே, லொஸ்லியா கவின் பேச்சை கேட்டுக்கொண்டு சேரனை பல முறை நிராகரித்தாலும், அவர் லொஸ்லியாவை மகளாகவே பாவித்து வருகிறார்.

 

இந்த நிலையில், இன்று பிக் பாஸ் போட்டியின் 87 வது நாளில், டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. அதன்படி போட்டியாளர்கள் பை ஒன்றை முதுகில் மாட்டுக்கொண்டு வட்டத்திற்குள் ஓட வேண்டும், பின்னாள் ஓடி வருபவர்கள், முன்னாள் ஓடுபவர்களின் முதுகில் உள்ள பையில் உள்ள தெர்மாகோல் பால்களை வெளியே எடுக்க வேண்டும். இது தான் டாஸ்க். 

 

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஈடுபடும் போது லொஸ்லியா வழுக்கி கீழே விழுந்து காலில் அடிபட்டுவிடுகிறது. ஆனால், சேரன் அதை கண்டுக்கொள்ளவில்லை. அதே சமயம், ஓடியதில் கால் வலி ஏற்பட்ட ஷெரினுக்கு அவர் கால் அமுக்கி விடுகிறார்.

 

லொஸ்லியாவிட அன்பாக நடந்துக் கொண்ட சேரன் திடீரென்று அவரை கண்டுக்காமல் ஷெரின் பக்கம் தாவியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதற்கான விடை இன்றைய எப்பிசோட்டில் தெரிய வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.