Jul 24, 2019 06:34 PM

சேரனால் லொஸ்லியாவுக்கு நேர்ந்த கொடுமை! - அதிர்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்

சேரனால் லொஸ்லியாவுக்கு நேர்ந்த கொடுமை! - அதிர்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்

பிக் பாஸ் மூன்றாம் பாகத்தில் தற்போது வரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், நான்காவதாக வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்பதை அறிந்துக் கொள்வதில் ரசிகர்கள் பேரார்வத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் ஆர்வத்தை பிக் பாஸ் சம்பவம் ஒன்று அதிர்ச்சியாக்கியுள்ளது.

 

காரணம், பிக் பாஸின் பேவரைட் போட்டியாளரான லொஸ்லியாவுக்கு சேரனால் நேர்ந்த கொடுமை தான். பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா ரொம்பவே நெருங்கி பழகக்கூடிய ஒரே போட்டியாளர் இயக்குநர் சேரன் மட்டும் தான். அதற்கான காரணமும், அந்த காரணத்திற்கான ஆதாரத்தையும் நாம் நேற்று வெளியிட்டிருந்தோம்.

 

இந்த நிலையில், லொஸ்லியா செய்யாத தவறு ஒன்றுக்காக அவருக்கு சேரன் அளித்திருக்கும் தண்டனையால் ஒட்டு மொத்த பிக் பாஸ் ரசிகர்களும் அதிர்ச்சியாகியிருப்பதோடு, சேரன் மீது கடுப்பாகியும் இருக்கிறார்கள்.

 

ஆம், தற்போது பிக் பாஸில் நடந்து வரும் கிராமம் டாஸ்க்கில் இயக்குநர் சேரன், ஊர் நாட்டமையாக உள்ளார். அவரது சொம்பை யாரோ இன்று திருடிவிட, அதற்காக அவர் லொஸ்லியா மீது சந்தேகப்பட்டு அவரை வெயிலில் கட்டி வைக்கிறார்.

 

இது விளையாட்டான விஷயம் தான் என்றாலும், சேரனுக்கு லொஸ்லியா மீது சந்தேகம் வந்ததும், அதற்காக அவர் லொஸ்லியாவை வெயிலில் கட்டி வைத்ததும் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

அன்பு என்றாலும் லொஸ்லியா, தண்டனை என்றாலும் லொஸ்லியா தானா சேரன் சார்!