Nov 05, 2019 04:32 PM

இயக்குநர் வஸந்தை பாராட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இயக்குநர் வஸந்தை பாராட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஜப்பான் உலகத் திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் விருது வென்றதற்காக, அப்படத்தின் இயக்குநர் வஸந்தை முதல்வர் டாக்டர்.எடப்பாடி பழனிசாமி நேரில் பாராட்டினார்.

 

பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் வஸந்த், பெண்களை மையமாக வைத்து ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பல்வேறு உலகத்திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும், விருதுகள் வென்றும் வரும் இப்படம் சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் உலகத் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு விருது வென்றுள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் வஸந்தை பாராட்டியிருக்கும் தமிழக முதல்வர் டாக்டர்.எடப்பாடி பழனிசாமி, ”இலக்கியம் சார்ந்த ஒரு தமிழ் திரைப்படம் உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதன் மூலமும் விருதுகளை வென்றதன் மூலமும் தமிழர்களுக்கு பெறுமை சேர்த்துள்ளது” என்று வாழ்த்தியுள்ளார்.

 

Edappadi Pazhanisamy and Director Vasanth