Mar 26, 2020 07:05 AM

கொரோனா அச்சத்தை தவிர்க்க சின்ன நயன்தாராவின் கூல் ஐடியா!

கொரோனா அச்சத்தை தவிர்க்க சின்ன நயன்தாராவின் கூல் ஐடியா!

உலகமே கொரோனா தாக்கத்தினால் அச்சத்தில் உள்ள நிலையில், தமிழக மக்களும் கொரோனா பீதியால் உரைந்து போயிருக்கிறார்கள். இதனால், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம், என்று பல பிரபலங்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதனால், மக்களிடையே அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வெளியே செல்பவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அதே சமயம், சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவின் பயங்கரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, தாங்கள் வீட்டில் இருப்பதையும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.

 

அந்த வகையில், சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லப்படும் நடிகை வாணி போஜன், தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு கொரோனா அச்சத்தில் இருக்கும் ரசிகர்களை கூலாக்கியுள்ளார்.

 

அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் வாணி போஜன், வீட்டில் இருந்தபடியே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

தற்போது வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக் போடுவதோடு, வாணி போஜனின் இந்த புகைப்படங்களை பர்த்து வீட்டில் இருந்தபடியே உங்களை கூலாக்கி கொள்ளுங்கள் மக்களே, என்று சிலர் கிண்டலாக கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.

 

இதோ அந்த கூல் புகைப்படங்கள்,

 

Vani Bhojan

 

Vani Bhojan

 

Vani Bhojan

 

Vani Bhojan

 

Vani Bhojan