Mar 17, 2020 06:18 AM

19 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடக்காது! - அஜித், ரஜினி படங்கள் பாதிப்பு

19 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடக்காது! - அஜித், ரஜினி படங்கள் பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் நடுங்கி போயிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே அச்சம் கொண்ட நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது. இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு, மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கையை போர்க்கால நடவடிக்கையாக எடுக்க வேண்டும், என்று அறிவுறுத்தியுள்ளது.

 

அதன்படி, மக்கள் கூடும், ஷாப்பிங் மால், பள்ளிக்கூடங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவைகளை இன்று முதல் (மார்ச் 17) வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள், தங்களது அரசு உத்தரவு கிடைத்தவுடன், திரையரங்கங்களை மூடி விடுவோம், என்று அறிவித்துவிட்டனர்.

 

இதற்கிடையே, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 19 ஆம் தேதி முதல் அனைத்து வகை படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கிறோம், என்று அறிவித்தார்.

 

சிலர் வெளிநாட்டிலும், வெளி ஊர்களிலும் இருப்பதால் 19 ஆம் தேதி முதல் தடை விதித்திருப்பதாக தெரிவித்தவர், மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும், என்றும் கூறினார்.

 

இந்த நடவடிக்கையால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்படும் என்றாலும், மக்களின் உயிருக்காக இதனை செய்கிறோம், என்று ஆர்.கே.செல்வமணி கூறினார்.

 

இந்த தடையால் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.