அஜித் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த திரையரங்க உரிமையாளர்!

’விஸ்வாசம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படம் அஜித்தின் சோதனை முயற்சி படம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஏற்ப சில மாஸான காட்சிகளை இயக்குநர் வினோத் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் ஓட்டல்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று உத்தரவிட்டிருப்பது போலவே திரையரங்கங்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதற்கு காரணம் திரையரங்க உரிமையாளர் ஒருவரின் அறிவிப்பு தான்.
24 மணி நேரமும் திரையரங்கங்கள் இயங்க அரசு உத்தரவு அளித்தாலும், திரையரங்கங்கள் சார்பில் இதுகுறித்து எந்தவித கருத்தும் வெளியாகத நிலையில், சென்னையில் உள்ள வெற்றி திரையரங்க உரிமையாளர், வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெடிய வெடிய ஓட்டப் போவதாக அறிவித்திருக்கிறார்.
மேலும், அன்றைய தினம் அஜித் ரசிகர்களுக்கு தூங்கா நாளாக அமையப்போவதாகவும், அவர் அறிவித்துள்ளார்.
திரையரங்க உரிமையாளரின் இந்த அறிவிப்பால் குஷியடைந்திருக்கும் அஜித் ரசிகர்கள், என்னதான் தூக்கம் கெட்டாலும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி விடிய விடிய அஜித் படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாட இப்போதே தயாராகிவிட்டார்களாம்.