Apr 25, 2019 07:52 AM

நயன்தாராவின் சஸ்பென்ஸை உடைத்த கலர்ஸ் டிவி!

நயன்தாராவின் சஸ்பென்ஸை உடைத்த கலர்ஸ் டிவி!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரஜினி, விஜய் என முன்னணி ஹீரோக்களின் படங்களிலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் பிஸியாக நடித்து வரும் நிலையில், விரைவில் நயன்தாராவை கலர்ஸ் டிவி-யில் பார்க்கலாம், என்று சேனல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

 

அதே சமயம், எதற்காக என்பதையும் தெரிவிக்கவில்லை. இதனால், நடிகர் நடிகைகள் பலர் டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போல நயன்தாராவும் கலர்ஸ் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறாரோ என்று பேசப்பட்டதோடு, கலர்ஸ் டிவியில் ஒளிபரப்புவதாக கூறப்படும் பிக் பாஸ் மூன்றாவது சீசனை நயன்தாரா தொகுத்து வழங்கலாம் என்றும் பேசப்பட்டது.

 

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கலர்ஸ் டிவியே நயன்தாராவின் சஸ்பென்ஸை உடைத்திருக்கிறது.

 

நயன்தாரா எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கப்போவதும் இல்லை, பிக் பாஸிலும் பங்கேற்கப் போவதில்லை. நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தை வரும் மே 12 ஆம் தேதி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதை தான் அந்த டிவி நிர்வாகம் இப்படி அறிவித்ததாம்.

 

படம் போடுவதில் என்ன ஸ்பெஷல் என்று யோசிக்கிறீர்களா, இதுவரை நேரடி தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்பாமல் இருந்த கலர்ஸ் டிவி முதல் முறையாக நேரடி தமிழ் படத்தை ஒளிபரப்பு செய்கிறது. அதனால் தான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு சர்பரைஸ் வைத்ததாம்.