திருட்டு கதையில் படமாக்கப்பட்ட ‘கோமாளி’! - ஒப்புக்கொண்ட படக்குழு

ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தின் கதை திருடப்பட்டது என்றும், பார்த்திபனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்ற உதவி இயக்குநருடைய கதையை திருடி தான் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை எடுத்திருக்கிறார், என்பது பற்றி நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேலும், இது குறித்த புகார் கதையாசிரியர் சங்கத்தில் அளிக்கப்பட்டவுடன் விசாரணை நடத்தப்பட்டு, ‘கோமாளி’ பட கதையும், உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கதையும் ஒன்று தான் என்று முடிவு எடுக்கப்பட்டதோடு, கிருஷ்ணமூர்த்தியின் கதை தான் என்றும் முடிவு செய்தார்கள். அதன்படி, கதையாசிரியர்கள் சங்க தலைவர் கே.பாக்யராஜ் நடத்திய பஞ்சாயத்தில், ‘கோமாளி’ குழு திருடப்பட்ட கதை என்று ஒப்புக் கொண்டிருக்கிறது.
இதற்கு சாட்சியாக, ‘கோமாளி’ பட டைடில் கார்டில் கதை கிருஷ்ணமூர்த்தி என்று போட சம்மதம் தெரிவித்ததோடு, கிருஷ்ணமூர்த்திக்கு இழப்பீடாக தொகை ஒன்றையும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
ஆனால், அந்த தொகை எவ்வளவு, எப்போது கொடுப்பார்கள் என்று இதுவரை ‘கோமாளி’ தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் சொல்லவில்லையாம்.
படம் ஓடினால் தரலாம் என்று நினைத்தாரோ!