Aug 05, 2019 05:58 PM
‘கோமாளி’ சர்ச்சை விவகாரம்! - அறிக்கை வெளியிட்ட ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோமாளி’ வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருந்த காட்சி ஒன்று, ரஜினியின் அரசியல் பிரவேஷம் குறித்து கிண்டல் செய்வது போல இருந்ததால், அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், நடிகர் கமல்ஹாசனும் கோமாளி பட தயாரிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சர்ச்சையான காட்சி படத்தில் இருந்து நீக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் ஜெயம் ரவி, அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அறிக்கை,