“கம்...கம்...முருகா...” வைரலாகும் குமார் நாராயணனின் பக்தி பாடல்

வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் தனி இசை பாடல்கள் பிரபலமாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான சில தமிழ் இசை தனிப்பாடல்கள் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தனி இசைப்பாடலாக உருவாகியுள்ள முருகக் கடவுளைப் பற்றிய ஆன்மீக பாடலான “கம்...கம்...முருகா....” பாடல் வெளியான சில மணி நேரங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழர்களின் கடவுளான முருகப் பெருமானின் இந்த பாடல், ஆங்கில வார்த்தை மூலம் ஆரம்பமானாலும், முருகனின் வீரம், தீரத்திற்கு ஏற்ற வகையில் இசையும், வரிகளும் அமைந்திருப்பது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இசையமைப்பாளர் குமார் நாராயணன் இசையமைத்திருப்பதோடு, ஜெகன் கல்யாண், சஜன் ஷெனாய் ஆகியோருடன் இணைந்து பாடல் வரிகளை எழுதி, பாடியுள்ளார்.
குமார் நாராயணன், ஜெகன் கல்யாண், சஜன் ஷெனாய் ஆகியோரின் வரிகள் மற்றும் குரலில், குமார் நாராயணனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலின் காட்சிகளை அந்தோணி வின்செண்ட் ரூத் படமாக்கியுள்ளார்.
செயிண்ட்யூன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் மிக்ஸிங் மற்றும் மாஸ்ட்ரேட் செய்யப்பட்டுள்ள ”கம்...கம்...முருகா...” வீடியோ இசை ஆல்பம் பாடல், தொழில்நுட்ப ரீதியாகவும், மக்களின் உணர்வுப்பூர்வமான ஆன்மீக பாடலாகவும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.