Feb 13, 2019 05:42 PM
காமெடி நடிகை மதுமிதாவுக்கு திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் காமெடி நடிகையாக பிரபலமான மதுமிதா, தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திலும் இவர் நடித்திருந்தார்.
சினிமாவில் பிஸியாக நடித்து வரும் மதுமிதா விரைவில் திருமதி.மதுமிதாவாகப் போகிறார். ஆம், ஜாங்கிரி மதுமிதாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தனது தாய்மாமன் மகன் மோசஸ் ஜோயல் என்பவரை தான் மதுமிதா திருமணம் செய்துக் கொள்கிறார்.
மாப்பிள்ளை மோசஸ் ஜோயல், பல குறும்படங்களை இயக்கியதோடு, பிரபல இயக்குநரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
மதுமிதா - மோசஸ் ஜோயல் திருமணம் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஓட்டலில் நடைபெறுகிறது.