Apr 02, 2020 07:59 AM

கீர்த்தி சுரேஷ் பற்றி பரவும் சர்ச்சை தகவல்!

கீர்த்தி சுரேஷ் பற்றி பரவும் சர்ச்சை தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ’மகாநதி’ படத்திற்காக தேசிய விருது பெற்றார். அதே ஆண்டு, விஜயின் ‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’, ‘சீமராஜா’ ஆகிய படங்களில் நடித்தவர், அதன் பிறகு அவரது நடிப்பில் வேறு எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை.

 

இதற்கிடையே, பாலிவுட் சினிமாவுக்காக உடல் எடையை குறைத்ததோடு, சில தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களையும் நிராகரித்த கீர்த்தி சுரேஷ், திடீரென்று பாலிவுட் படத்தை நிராகரித்து விட்டு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பென்குயின்’, ரஜினியின் ‘அண்ணாத்தே’ ஆகிய படங்களிலும், சில மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க-வில் உள்ள பெரிய தொழிலதிபரின் மகனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும், 2021 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

 

தற்போது கோலிவுட்டில் வைரலாகி வரும் இந்த தகவல், உண்மையா அல்லது வதந்தியா என்பதை கீர்த்தி சுரேஷ் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.