May 30, 2019 10:39 AM

பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை நடிகை! - எகிறப்போகும் டிஆர்பி ரேட்டிங்

பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை நடிகை! - எகிறப்போகும் டிஆர்பி ரேட்டிங்

இந்தியா முழுவதும் உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்காக எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில், தமிழக டிவி ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நிகழ்ச்சி ஓளிபரப்பாகும் தேதியை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், போட்டியாளர்களாக கலந்துக் கொள்பவர்கள் யார் யார்? என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 

இதற்கிடையே, போட்டியாளர்களாக பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டாலும், தற்போது காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா கலந்துக் கொள்வது மட்டுமே உறுதியாகியுள்ளது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூதல் சீசனை விட இரண்டாம் சீசன் சற்று மந்தமாக இருந்ததால், தற்போது ஒளிபரப்பாக உள்ள மூன்றாவது சீசனை பெரும் பரபரப்போடு நகர்த்த வேண்டும் என்று விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. இதற்காக தான் போட்டியாளர்களின் பெயர்கள் அறிவிப்பதில் சற்று தாமதமாகிறதாம்.

 

முதல் சீசனில் எப்படி ஓவியாவின் காதல் விவகாரம் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் சுவாரஸ்யம் சேர்த்ததோ, அதுபோல் மூன்றாவது சீசனிலும் அத்தகைய சுவாரஸ்யம் இருக்க வேண்டும், என்பதில் உறுதியாக இருக்கும் விஜய் டிவி, அதற்காக போட்டியாளராக சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியை களம் இறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Sri Reddy

 

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது செக்ஸ் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையி தான் வசிக்கிறார். அவ்வபோது சமூக வலைதளங்களில் யாரை பற்றியாவது, எதாவது ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தும் ஸ்ரீரெட்டி, பிக் பாஸ் வீட்டுக்குள் போனால் நிகழ்ச்சி நிச்சயம் சூடு பிடிப்பதோடு, டி.ஆர்.பி ரேட்டிங்கும் அதிகரிக்கும் என்பதால், விஜய் டிவி ஸ்ரீரெட்டிக்கு கணிசமான சம்பளம் கொடுப்பதாக கூறி பேசி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளியாகியிருக்கும் இந்த தகவல் நிஜமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும்  கூறப்படுகிறது.