Jul 31, 2018 03:26 AM

’விஜய் 63’ க்காக போடப்பட்ட கண்டிஷன்! - மெர்சலான அட்லீ

’விஜய் 63’ க்காக போடப்பட்ட கண்டிஷன்! - மெர்சலான அட்லீ

‘தெறி’, ‘மெர்சல்’ என விஜய்க்கு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அட்லீ சில நடவடிக்கையால் விஜய் அவருடன் தொடர்ந்து பணியாற்ற தயக்கம் காட்டி வந்துள்ளார். பிறகு விஜய் அட்லீ சந்திப்புக்கு காரணமாக இருந்தவர் மூலம் அட்லீ விஜய்க்கு தூதுவிட, விஜயும் சற்று மனம் இறங்கி வந்தததால் தான் விஜயின் 63 வது படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லீ பெற்றிருக்கிறாராம்.

 

அதே சமயம், விஜயின் 63 வது படத்தின் கதையை அட்லீயிடம் கேட்ட ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம், அட்லீக்கு பல கண்டிஷன்களை போட்டிருக்கிறதாம். 

 

அதாவது, ஏஜிஎஸ்-ன் அலுவலகத்தில் தான் அட்லீ, தனது உதவி இயகுநர்களுடன் கதை விவாதத்தில் ஈடுபட வேண்டுமாம். அப்படி தனியாக அலுவலகம் உள்ளிட்ட பிற வசதிகள் வேண்டும் என்றால், அதை அவர் சொந்த செலவில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டதாம். அதேபோல், படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று தற்போதே தெளிவாக கூறி, அதை அக்ரிமெண்டில் எழுதி கையெத்து போட வேண்டும். பிறகு பட்ஜெட் அதிகரித்தால், அட்லீயின் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்ததாம்.

 

 

Vijay and Atlee

’மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றாலும் அதன் தயாரிப்பாளர் நஷ்ட்டத்தை சந்தித்ததற்கு அட்லீயின் தேவையில்லாத செலவுகளே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்தே, ஏஜிஎஸ் நிறுவனம் அட்லீயிடம் கரார் காட்டியிருக்கிறது.

 

தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து கண்டிஷன்களுக்கும் ஓகே சொல்லியிருக்கும் அட்லீ, அனைத்திலும் கையெழுத்து போட்டதோடு, ‘மெர்சல்’ என்ற படம் எடுத்த நம்மலய இப்படி மெர்சலாக்குறாங்கலே, என்று தனது உதவியாளர்களிடம் புலம்புகிறாராம்.