Mar 21, 2020 09:40 AM

விஜயின் 65 வது படத்தை விடுங்க! - 66 வது படத்தின் சேதி தெரியுமா?

விஜயின் 65 வது படத்தை விடுங்க! - 66 வது படத்தின் சேதி தெரியுமா?

விஜயின் ‘மாஸ்டர்’ ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ரிலீஸ் தேதியில் மாற்றம் நிகழ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், விஜய் தனது 65 வது படத்திற்கு தயராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் தான் இப்படத்தை இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து விஜயின் 65 வது படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகததால், ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குநர் என்ற தகவல் வதந்தியாகவே இருக்கிறது.

 

இந்த நிலையில், விஜயின் 66 வது படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம், விஜயின் 66 வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் உறுதி செய்யப்பட்டு விட்டாராம். அவர் வேறு யாருமல்ல, இயக்குநர் கம் ஹீரோ சசிகுமார் தானாம். 

 

தன்னை நடிகராக ஒப்பந்தம் செய்ய அனுகும் பலரிடம், சசிகுமார் தான் விஜயை வைத்து படம் இயக்கப் போகும் தகவலை கூறியிருக்கிறாராம். அதனால், விஜய் - சசிகுமார் இணையும் படம் உறுதியாகியிருப்பதோடு, இப்படம் விஜயின் 66 வது படமாக இருக்குமாம்.

 

Sasikumar

 

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு விஜயை ஐத்து சசிகுமார் படம் இயக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால், அது நடக்காமல் போன நிலையில், தற்போது மீண்டும் விஜய் - சசிகுமார் கூட்டணி படம் பற்றிய தகவல் கசிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.