ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா! - அதிர்ச்சியில் திரையுலகம்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவியான ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராயின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அபிஷேக் - ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்திருக்கிறது.
இந்திய சினிமா மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவிலும் நன்கு அறியப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது சினிமா உலகினை மட்டும் இன்றி ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.