Jun 20, 2020 08:02 AM

தமிழ் சினிமா பிரபல இயக்குநர், நடிகருக்கு கொரோனா பாதிப்பு?

தமிழ் சினிமா பிரபல இயக்குநர், நடிகருக்கு கொரோனா பாதிப்பு?

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவில் பாதிப்பு அதிகம் உள்ளது. இதற்காக நேற்று முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 

இதற்கிடையே, தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜயின் ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜித், ‘இட்லி’ என்ற படத்தை இயக்கிய வித்தியாதரன் உள்ளிட்ட இயக்குநர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சில தயாரிப்பாளர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது

 

இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகர் அருண் விஜய் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களது வீட்டுகளிலேயே சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இயக்குநர் மோகன்ராஜா மற்றும் அவரது தந்தையும், தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Arun Vijay and Director Mysskin

 

ஆனால், இவர்களுக்கு கொரோனா பாதித்திருப்பதாக மாநகராட்சி அல்லது சுகாதாரத்துறையிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.