Apr 01, 2020 01:30 PM

கொரோனா அச்சம்! - மகனை தனிமைப்படுத்திய பிரபல நடிகர்

கொரோனா அச்சம்! - மகனை தனிமைப்படுத்திய பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும், வைரஸ் தாக்காமல் இருக்கவும் எந்தவித மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அதேபோல், ஒருவரை வைரஸ் தாக்கினால், அவருக்கு அதற்கான அறிகுறி தெரிய சுமார் 14 நாட்கள் ஆகும் என்பதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.

 

இதனால் தான், அனைவரும் ஊரடங்கு உத்தரவு மூலம் தனித்திருக்க வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சினிமா பிரபலங்களும் மக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகராஜ சுரேஷ் கோபியின் மகன், சமீபத்தில் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். மேலும், அவர் பயணித்த விமானத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தனது குடும்ப மருத்துவர் பரிந்துரைப்படி நடிகர் சுரேஷ் கோபி, தனியாக ஒரு பிளாட் எடுத்து அதில் தனது மகனை தனிமைப்படுத்தியுள்ளாராம்.

 

Suresh Gopi

 

சுரேஷ் கோபியின் மகனுக்கு இதுவரை கொரோனா பாதிப்பிற்கான எந்த ஒரு அறிகுறியும் ஏற்படவில்லை, என்றாலும் பிறரின் நலனுக்காக அவர் இப்படி ஒரு முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.