Mar 30, 2020 12:06 PM

நடிகர் விஜய்க்கு கொரோனா பரிசோதனை? - அச்சத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு கொரோனா பரிசோதனை? - அச்சத்தில் ரசிகர்கள்

கோரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் பல தடுமாற்றத்தில் இருக்க, இந்தியாவில் சமூக பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு உத்தவு பிறக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில், நடிகர் விஜய் வீட்டில் கொரோனா தொடர்பான பரிசோதனைக்காக மருத்துவ குழு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதன் காரணமாகவே, அவரது வீட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

அதே சமயம், இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனின் கட்சி அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. பிறகு அது குறித்து மாநகராட்சி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.