இந்தி படத்தை ரீமேக் செய்யும் சி.வி.குமார்!

‘அட்ட கத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான சி.வி.குமார், தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்து வந்தவர் ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
சி.வி.குமாரின் முதல் படமான மாயவன் பெரிய அளவில் இல்லை என்றாலும் சுமாரான அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் தனது இரண்டாவது படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வந்தார்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கேங்க்ஸ் ஆப் வசியப்பூர்’ படத்தை சி.வி.குமார் தமிழியில் ரீமேக் செய்கிறார். ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்று தலைப்பில் அவர் இப்படத்தை இயக்கி வருகிறார்.
வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குநர் ராமதாஸ், பிரியங்கா ருத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.