May 27, 2019 07:06 PM

சர்வேதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற நடன இயக்குநர் தினா மகள்!

சர்வேதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற நடன இயக்குநர் தினா மகள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவரான தினாவின் மகள் தஸ்நீம் சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

பிரபல நடன இயக்குநரான தினா, பல வெற்றிப் படங்களில் தனது தனித்துவமான நடன இயக்கத்தால் அடையாளம் காணப்பட்டவர். பல முன்னணி இயக்குநர்களின் பேவரைட் நடன இயக்குநரான தினாவின் 11 வயது மகளான தஸ்நீம், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

சினிமா நடன இயக்குநரான தினாவின் மகளான தஸ்நீம் வென்ற இந்த தங்கப் பதக்கம் சாதாரணமானதல்ல, இவருக்கு சரியான அங்கீகாரமும், அரசின் உதவியும் கிடைத்தால், இவர் ஆசிய அளவிலும், ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம், என்று இவரது கராத்தே திறமையை பார்த்தவர்கள் இவருக்கு நற்சான்று வழங்கியுள்ளார்கள்.

 

தஸ்நீம் தினாவின் இத்தகைய சாதனையை கொண்டாடும் விதத்திலும், இதை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் விதத்திலும், இன்று சென்னையில் உள்ள நடன இயக்குநர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன், ஆக்‌ஷன் பிரகாஷ், நடன இயக்குநர்கள் ஷோபி, நோபல், குரு தேவ், ஹரி குமார், இயக்குநர் எழில், நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

Dasmeen Dina

 

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அனைவரும், ”நடன இயக்குநராக இருக்கும் தினா, தனது மகளை நடன இயக்குநராகவோ அல்லது பரதநாட்டியத்திலோ ஈடுபடுத்தி இருக்கலாம். ஆனால், அதற்கு எதிர்மறையாகை இருந்தாலும், மகளின் கனவை நிறைவேற்ற அவரை கராத்தே பயிற்சியில் ஈடுபடுத்தியது மிகப்பெரிய விஷயம். இந்த சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தஸ்மீன், எந்த அளவுக்கு கஷ்ட்டப்பட்டிருப்பார் என்பதை தங்களால் உணர முடிகிறது. அவரது இந்த வலி நிறைந்த சாதனை, அவரது லட்சியத்தை நிச்சயம் நிறைவேற்றும்.” என்று வாழ்த்தினார்கள்.

 

தஸ்நீமுக்கு அப்படி என்ன சாதனை நிகழ்த்த வேண்டும், என்று நினைக்கிறீர்களா?, ஸ்டண்ட் இயக்குநராக வேண்டும் என்பது தான் அவரது லட்சியமாம்.

 

Dasmeen Dina

 

நடன இயக்குநரின் மகளுக்கு ஸ்டண்ட் இயக்குநராக வேண்டும், என்பது தான் லட்சியம். இது லட்சியம் மட்டும் அல்ல, சாதனையும் கூட. ஆம், ஒரு பெண் ஸ்டண்ட் இயக்குநராவது உலக அளவில் இது தான் முதல் முறை.

 

வாழ்க தஸ்மீன், வளர்க அவரது லட்சியம்.