‘தர்பார்’ படத்திற்கு அனுமதி! - உற்சாகத்தில் ரசிகர்கள்

ரஜினிகாந்தின் ‘தர்பார் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் தற்போதே கொண்டாட தொடங்கிவிட்டார்கள். அதே சமயம், படத்தின் சிறப்பு காட்சிக்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், ‘தர்பார்’ படத்திற்காக ஜனவரி 9, 10, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் சிறப்பு காட்சி திறையிடுவதற்கான அனுமதியை பெறுவது பெரும் பிரச்சினையாக இருந்ததோடு, இழுபறியாகவும் இருந்தது. ஆனால், தர்பார் படத்தை பொருத்தவரை சிறப்பு காட்சியில் எந்தவித இழுபறியும் இல்லாமல் உடனடியாக அனுமதி கிடைத்திருக்கிறது.
அதே சமயம், சேலத்தில் ரஜினி ரசிகர்கள் ஹெலிகாப்டர் மூலம் கட்-அவுட்டுக்கு மலர் தூவ அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அம்மாவட்ட கலெக்டர் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.