Jun 26, 2019 07:19 AM

‘தர்பார்’ படத்தின் முக்கிய புகைப்படம் லீக்! - அதிர்ச்சியில் படக்குழு

‘தர்பார்’ படத்தின் முக்கிய புகைப்படம் லீக்! - அதிர்ச்சியில் படக்குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பஸ்ட் லுக் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு வேடம் போலீஸ் வேடமாம்.

 

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாலிவுட் முன்னணி நடிகர்கள் சிலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

 

இதற்கிடையே, மும்பை கல்லூரி ஒன்றில் படமாக்கப்பட்டு வந்த ‘தர்பார்’ படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு புகைப்படங்களை வெளியிடுவது கல்லூரி மாணவர்கள் என்பதை கண்டறிந்த படக்குழு அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு படப்பிடிப்பை மாற்றினார்கள்.

 

இந்த நிலையில், ‘தர்பார்’ படத்தின் மேலும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படி தொடர்ந்து படத்தின் புகைப்படங்கள் வெளியாவதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாம்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Darbar