Aug 27, 2019 03:09 AM

’தர்பார்’ படத்தின் புதிய புகைப்படங்கள் லீக்!

’தர்பார்’ படத்தின் புதிய புகைப்படங்கள் லீக்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மகராஷ்ட்டிரா மாநிலத்தில் நடைபெற்று வந்தது. ஆனால், அங்கு தொடர் கன மழை பெய்து வந்ததால் படப்பிடிப்பு பாதிப்படைந்தது. இதனால், படப்பிடிப்பு ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது.

 

தற்போது ஜெய்ப்பூரின் பின்க் சிட்டியில் ‘தர்பார்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த், நயன்தாரா பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், ரஜினி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே மும்பை கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடந்த போது புகைப்படங்கள் லீக் ஆகியதால் படக்குழு அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது ஜெய்ப்பூர் படப்பிடிப்பின் புகைப்படங்களும் லீக் ஆகியிருப்பதால் படக்குழு பேரதர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Darbar

 

Darbar