Apr 29, 2019 09:14 AM

’தர்பார்’ புகைப்படங்கள் லீக் ஆகும் ரகசியம்! - அச்சத்தில் முருகதாஸ்

’தர்பார்’ புகைப்படங்கள் லீக் ஆகும் ரகசியம்! - அச்சத்தில் முருகதாஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு ஹனிருத் இசையமைக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் படமாக்கப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையே, படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வெளியானதால் ‘தர்பார்’ படக்குழு அப்செட்டாகியுள்ளார்கள். மேலும், தொடந்து இதுபோன்ற புகைப்படங்கள் தினமும் வெளியாகி வருவதால், யார் புகைப்படங்களை லீக் செய்கிறார்கள் என்பது குறித்து இயக்குநர் முருகதாஸ் விசாரிக்க, கல்லூரி மாணவர்கள் சிலர் தான் இப்படி செய்கிறார்கள், என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது.

 

அதாவது, ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்களாம். அவர்களிள் சிலர் தான் படப்பிடிப்பு புகைப்படங்களை எடுத்து லீக் செய்துவிடுகிறார்களாம்.

 

இதை அறிந்தாலும், அவர்களிடம் இது குறித்து படக்குழுவினர் எதுவும் கேட்பதில்லையாம். காரணம், இந்த விவகாரம் குறித்து கேட்டால், அங்கு அமைத்திருக்கும் செட்டை அவர்கள் அடித்து நொறுக்கிவிடுவார்களோ, என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அச்சப்படுகிறாராம்.