Oct 01, 2019 04:36 AM

இறுதி சுற்றுக்கு தேர்வான தர்ஷன்! - சதியால் வெளியேற்றப்பட்ட ரகசியம் வெளியானது

இறுதி சுற்றுக்கு தேர்வான தர்ஷன்! - சதியால் வெளியேற்றப்பட்ட ரகசியம் வெளியானது

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்றாலும், நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரும் டைடில் வெல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட தர்ஷன் வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

 

போட்டியில் இருந்து தர்ஷன் வெளியேறினாலும் மக்களிடம் அவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது. அப்படி இருக்கையில் அவர் எப்படி வெளியேற்றப்படலாம் என்ற கேள்வி ரசிகர்களிடம் மட்டும் இன்றி பல பிரலபங்களிடம் இருக்கிறது. இதனால், தர்ஷன் வெளியேற்றத்திற்கு பின்னணி ஏதோ சதி இருப்பதாக ரசிகர்கள் சந்தேகிக்கிறார்கள்.

 

இந்த நிலையில், ரசிகர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஒருவர் தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கு பின்னணியில் நடந்தது இது தான், என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் தர்ஷன் குடும்பத்திற்கு போன் செய்து, ”தர்ஷன் இறுதிப் போட்டிக்கு தேர்வாகிவிட்டார். அவருக்கு சில உடைகள் எடுத்து வாருங்கள்” என்று கூறினார்களாம். ஆனால், அப்படி கூறியவர்கள், திடீரென்று தர்ஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படலாம், கடைசி நிமிடத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். இறுதி முடிவு விஜய் டிவி கையில் தான் உள்ளது, என்றும் தெரிவித்தார்களாம்.

 

எனவே, தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கு பின்னணியில் சேனலின் சதி இருப்பதாக புரிந்தாலும், இது அதிகாரப்பூர்வமான தகவலாக எடுத்துக் கொள்ள முடியாது. அதே சமயம், விஜய் டிவி மீது இதுபோன்ற பல புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.