Dec 24, 2019 07:30 AM

ஆணுடன் டேட்டிங்! - புதிய சர்ச்சையில் சிக்கிய கவின்

ஆணுடன் டேட்டிங்! - புதிய சர்ச்சையில் சிக்கிய கவின்

பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் கவின். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே டிவி சீரியலிலும், திரைப்படத்திலும் நடித்திருக்கும் கவின், பிக் பாஸ் சீசன் 3 யில் காதல் மன்னனாக வலம் வந்தார். ஆரம்பத்தில் போட்டியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்கள் அனைவருடன் காதல் வளர்த்த கவின், இறுதியாக லொஸ்லியாவை உறுகி உறுகி காதலிக்க, அவரும் கவினை காதலித்து வந்தார்.

 

தற்போது நிகழ்ச்சி முடிவடைந்ததும் அவர் அவர், வேலையை பார்க்க, கவினும் சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ஒன்றில் ஹீரோவாக கவின் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இப்படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கவினிடம், “நீங்கள் யாருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

 

அதற்கு பதில் அளித்த கவின், இயக்குநர் செல்வராகவனுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறினார். மேலும், இயக்குநர் செல்வராகவனை பற்றி நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதால், அவரை டேட் செய்ய விரும்புகிறேன், என்றும் தெரிவித்துள்ளார்.

 

Director Selvaraghavan

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினின் காதல் அரங்கேற்றம் அனைத்தும் நாடகம் என்று கூறப்பட்ட நிலையில், போட்டியில் இருந்து அவர் பாதியில் வெளியேறியது. போட்டி முடிந்த பிறகு காதல் குறித்து எதுவும் பேசாமல் இருந்தது, என ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கிய கவின், தற்போது இந்த டேட்டிங் விஷயத்திலும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.