விவாகரத்து குறித்து உருக்கமாக பேசிய டிடி!

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் முக்கியமானவராக திகழ்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருக்கும் இவர், சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட டிடி, திருமணமான இரண்டு ஆண்டுகளில் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். மேலும், தொடர்ந்து தொகுப்பாளினி பணியை செய்ய கூடாது, என்று கணவரின் பெற்றோர் வற்புறுத்தியதால் தான் விவாகரத்து செய்தேன், என்றும் கூறினார்.
இதற்கிடையே, தனது விவாகரத்துக்கு குறித்து சமீபத்திய பேட்டில் பேசிய ஸ்ரீகாந்த், டிடி-க்கு அதிகமான ஆண் நண்பர்கள் இருப்பதாலும், அவர் வீட்டுக்கு தினமும் நள்ளிரவில் வந்ததாலும் தான், அவரை பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது, என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், விருது வழங்கும் விழா ஒன்றில் சிறந்த தொகுப்பாளினி விருதை வென்ற டிடி, விருதை பெற்றுக் கொண்ட பிறகு மேடையில் பேசும் போது, தனது விவாகரத்து குறித்து உருக்கமாக பேசியனார்.
நிகழ்ச்சியில் டிடி பேசுகையில், “நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம். ஆனாலும் நாம் வழக்கம் போல காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு வேலைக்கு கிளைம்பினால், உங்கள் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது” என்று கூறினார்.