Feb 27, 2019 09:47 AM

இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள ‘தாதா 87’!

இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள ‘தாதா 87’!

உலக அளவில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் ஹீரோவாக நடித்தது சாதனையாக கருதப்பட்டு வரும் நிலையில், ’தாதா 87’ படத்தின் மூலம் சாருஹாசன் தனது 87 வயதில் கதையின் நாயகனாக நடித்திருப்பது இந்திய சினிமாவில் ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது.

 

‘ஏஜிங் சூப்பர் ஸ்டார்’ (Ageing Superstar) என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன், இப்படத்தில் தில்லான தாதவாக நடித்திருக்கிறார். மற்றும் ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

கலை சினிமாஸ் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும், டிரைலரும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படம் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகிறது.