மலையாளத்தில் ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?

பிரித்விராஜ், பிஜு மேனன், கெளரி நந்தா ஆகியோரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. காவல் துறை அதிகாரியான பிஜு மேனனுக்கும், பிரித்விராஜுக்கும் இடையே ஏற்படும் மோதலும், அதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் தான் இப்படத்தின் கதை.
சாச்சி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் பெற்றிருக்கிறார். இவர் தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தயாரித்திருப்பதால், இந்த படத்தையும் தனுஷை வைத்து தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பிரித்விராஜ் நடித்த கதாப்பாத்திரம் தனுஷுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், இப்படத்தின் தமிழ் ரீமேக் தனுஷ் தான் நடிக்கப் போகிறார், என்று கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தின் ரீமேக் உரிமையை பெற்றிருப்பதாக அறிவித்த தயாரிப்பாளர் கதிரேசன், தனுஷ் நடிப்பது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை.