இங்கிலாந்தில் படமாகும் தனுஷ் படம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் முழுவதும் லண்டனில் படமாக்கப்பட உள்ளது. இதில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார்.
ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
கேங்க்ஸ்டார் படமாக உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலை வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை வடிமைக்கிறார்.
ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 18 வது படமாக உருவாகும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சக்கரவர்த்தி ராமசந்திரா பொறுப்பேற்றுள்ளார்.