Aug 08, 2019 05:39 PM

தனுஷின் ‘அசுரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷின் ‘அசுரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரன்’ படத்தில் ஹீரோயினாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது. அதன்படி, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி ‘அசுரன்’ வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 

இயக்குநர் வெற்றி மாறன், தனுஷ் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வட சென்னை’ படத்திற்கு அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ‘அசுரன்’ மூலம் இக்கூட்டணி சர்பிரைஸ் கொடுத்த நிலையில், ‘வட சென்னை 2’ விரைவில் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.