Aug 01, 2019 07:39 AM

மகளிர் கல்லூரியில் மாஸ் காட்டிய துருவ் விக்ரம்! - கூச்சலிட்ட மாணவிகள்

மகளிர் கல்லூரியில் மாஸ் காட்டிய துருவ் விக்ரம்! - கூச்சலிட்ட மாணவிகள்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளம் கொண்ட நடிகரின் விக்ரமின் மகன் துருவ், தனது முதல் படமான ‘ஆதித்ய வர்மா’ வெளியாவதற்கு முன்பாகவே நட்சத்திர அந்தஸ்து பெற்று வருகிறார். தந்தையை போல தனக்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் துருவ் விக்ரம், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Actor Dhruv Vikram

 

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், துருவ் சமீபத்தில் சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அப்போது அவரை மாணவிகள் சூழ்ந்து கொண்டனர். மாணவிகள் மத்தியில் கலகலப்பாக உரையாடிய அவர், நிகழ்ச்சியில் ஒரு பாடலும் பாடி அசத்தினார். கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற "கல்யாண வயசு தான்" என்ற பாடலை அவர் பாட மாணவிகள் கை தட்டி உற்சாகப் படுத்தினார்கள். 

 

Dhruv Vikram Actor

 

மேலும் மாணவிகள் அனைவரும் துருவ் விக்ரமோடு செல்பி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஆதித்ய வர்மா படத்தின் டீசர் திரையிடப்பட்டது. அவ்வேளையில் மாணவிகள் சந்தோசக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

 

Dhruv Vikram

 

இதன் மூலம் படம் வெளியாவதற்கு முன்பாகவே, பெரிய ரசிகர் படையை கொண்டிருக்கும் துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ மிகப்பெரிய ஓபனிங்கை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.